இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் இனிப்பு சாப்பிட்ட இரண்டு பேர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) சிந்த்வாராவில்(Chhindwara) உள்ள ஒரு அரசு அலுவலகத்திற்கு வெளியே கிடைத்த இனிப்புகளை சாப்பிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வாரம், பொது சுகாதார பொறியியல் துறை(PHED) அலுவலகத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு காவலர், வளாகத்திற்கு வெளியே காய்கறிகள் மற்றும் இனிப்புகள் அடங்கிய உரிமை கோரப்படாத பையைக் கண்டுபிடித்தார்.

அதில் இருந்த சில இனிப்புகளை சாப்பிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, 50 வயதான தாசரு யதுவன்ஷி(Dasaru Yaduvanshi) கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இனிப்புகளை சாப்பிட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜனவரி 11 அன்று சிகிச்சையின் போது அவர் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, தாசரு யதுவன்ஷி இனிப்புகளை சாப்பிட்ட ஒரு நாள் கழித்து அருகிலுள்ள தேநீர் கடை உரிமையாளரின் குடும்பத்தினரும் அவற்றை சாப்பிட்டுள்ளனர்.

ஜனவரி 11ம் திகதி, சுந்தர் லால் கதுரியா, அவரது மனைவி, இரண்டு மகள்கள், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோர் அதே அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் 72 வயதான சுந்தர் லால் கதுரியா(Sundar Lal Khaduria) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இனிப்புகளை சாப்பிட்ட ஏழு பேருக்கும் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்படக் காரணம் என்ன மற்றும் அலுவலகத்திற்கு வெளியே யார் அவற்றை விட்டுச் சென்றார்கள் போன்ற காரணங்களை கண்டறிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!