பொலிஸ் அதிகாரிகளின் மோசமான செயல்! நால்வர் கைது
தொழிலதிபர் ஒருவரை தாக்கி பணம் மற்றும் தங்க மோதிரத்தை கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தொழிலதிபர் வீடு திரும்ப பேருந்துகள் கிடைக்காததால் கடுவெலவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார்.
இதன்போது குறித்த நான்கு சந்தேகநபர்களும் அறையின் உரிமையாளருடன் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
இதன்போது 2 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் தொழிலதிபர் தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டி, அவரைத் தாக்கி பொலுட்களை கொள்ளையடித்ததாக கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் காலியின் நாகொட மற்றும் இமதுவ பகுதியைச் சேர்ந்தவர்கள், மற்ற இரண்டு சந்தேக நபர்களும் பிலியந்தலை மற்றும் கினிகத்தேன பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




