தமிழ்நாடு

சேலத்தில் வாக்களிக்க வரிசையில் நின்றவர்களில் இருவர் உயிரிழப்பு!

சேலம் மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்றிருந்தவர்களில் 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு துவங்கி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37 சதவீத வாக்குகளும், புதுச்சேரியில் 27.63 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. இதே போல் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 17.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சூரமங்கலம் பகுதியில், தனியார் பள்ளி ஒன்றில் மனைவியுடன் வாக்களிக்க வந்த பழனிச்சாமி என்பவர் வரிசையில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவ பணியாளர்கள் அவரை பரிசோதித்தனர்.

வாக்குச்சாவடியில் உயிரிழந்த பழனிச்சாமி

ஆனால் அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதனால் வாக்குச்சாவடி மையத்தில் இருந்த வாக்காளர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதே போல் சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க ஏராளமானோர் இன்று காத்துக் கொண்டிருந்தனர். அப்போது மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை பரிசோதித்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த பொலிஸார் அவரிடம் இருந்த உடைமைகளை பரிசோதித்த போது, அவரது பெயர் சின்னபொண்ணு (77) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்