ஐரோப்பா

ஐரோப்பாவின் ஷெங்கன் பகுதியில் இணைத்துக்கொள்ளப்பட்ட இரு முக்கிய நாடுகள்!

ருமேனியாவும், பல்கேரியாவும் ஷெங்கன் பகுதி என அழைக்கப்படும் பகுதியில் ஓரளவு இணைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து அவை இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய  தலைவர் Ursula von der Leyen “இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய வெற்றி” என்றும் உலகின் மிகப்பெரிய இலவச பயண மண்டலத்திற்கான  வரலாற்று தருணம்” எனவும் கூறி பாராட்டியுள்ளார்.

ஷெங்கன் பகுதி 1985 இல் நிறுவப்பட்டது. பல்கேரியா மற்றும் ருமேனியாவின் சேர்க்கைக்கு முன், சுவிட்சர்லாந்து, நோர்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகியவற்றுடன் 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் 23  நாடுகளை  உள்ளடக்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் ருமேனியா மற்றும் பல்கேரியாவை ஷெங்கன் மண்டலத்தில் அனுமதிப்பதை ஆஸ்திரியா வீட்டோ செய்தது.  ஆனால் குரோஷியாவை முழுமையாக அணுக அனுமதித்தது.

இதனையடுத்து இது தொடர்பில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 52 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!