வெளிநாட்டு வேலைகளுக்காக இரண்டு லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்
வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை இன்று ஆறு மணியளவில் இரண்டு லட்சத்து இருநூற்று இருபத்தி ஆறு என பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மட்டும் 311,016 பேர் வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியுள்ளனர்.
ஒரு வருடத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் அதிக எண்ணிக்கை இதுவாகும் என பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)





