இலங்கை

கொழும்பில் பலரை ஏமாற்றி மோசடி – சிக்கிய இருவர் – விசாரணையில் வெளிவந்த தகவல்

கிரிபத்கொட பிரதேசத்தில் பண மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 37 மற்றும் 39 வயதுடைய கந்தானை மற்றும் பமுனுகம பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.

சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், போலி ஆவணங்களை தயாரித்து 130,000,00 ரூபாவுக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்த கார் ஒன்றை பன்னல பிரதேசத்தில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் வீடு கொள்வனவு, விற்பனை மற்றும் புதிதாக வீடு கட்டுதல் ஆகிய வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களுக்கு எதிராக வெலிசர மற்றும் புதுக்கடை நீதிமன்றங்களில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!