1,13,000 பேரைக் கொல்லும் போதைப்பொருளுடன் அமெரிக்காவில் பிடிபட்ட இரண்டு இந்தியர்கள்
7 மில்லியன் டாலர் மதிப்புள்ள 309 பவுண்டுகள் கோகைனை கடத்தியதற்காக இரண்டு இந்திய லாரி ஓட்டுநர்கள் இந்தியானாவில்(Indiana) கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 வயதான குர்பிரீத் சிங்(Gurpreet Singh) மற்றும் 30 வயதான ஜஸ்வீர் சிங்(Jasvir Singh) ஆகியோர் முறையே 2017 மற்றும் 2023ம் ஆண்டுகளில் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.
முக்கிய நெடுஞ்சாலை நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் சுமார் “113,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களைக் கொல்ல போதுமானது” என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை(DHS) தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் போதைப்பொருள் கடத்தியதற்காக குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள் என்றும் அவர்கள் மீது நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியானா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.





