மலை உச்சியில் நாளை இணையும் இரு இதயங்கள்!
நடிகர் விஜய்தேவரகொண்டா Vijay Deverakonda , நடிகை ராஷ்மிகா Rashmika ஆகிய ஜோடியின் காதல் திருமணம் நாளை நடைபெறுகின்றது.
நெருங்கிய உறவினர்கள் 100 பேர் மட்டும் திருமண நிகழ்வில் பங்கேற்கவுள்ளனராம்.
திருமண விழா உதய்ப்பூர் நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் ஆரவல்லி மலை உச்சியில் அமைந்துள்ள ஐ.டி.சி. மெமென்டோஸ் ரிசார்ட்டில் இடம்பெறவுள்ளதாம்.
மலைப் பகுதியில் விரிவான தோட்டங்களுக்கு மத்தியில் உள்ள இந்த ஆடம்பர ரிசார்ட் தனியுரிமைக்கு பெயர் பெற்ற இடமாகும்.
திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஆகியேர் குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இருந்து உதய்ப்பூர் புறப்பட்டு சென்றனர்.
திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நேற்று முதல் தொடங்கியது. இன்று ஹல்டி மற்றும் சங்கீத் விழாக்கள் நடைபெறுகிறன.
நாளை குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இருவரது திருமணமும் நடைபெறுகிறது.




