எவரெஸ் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த இரு வீரர்கள் உயிரிழப்பு!
எவரெஸ் மலையேற்றத்தின்போது இரு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவரும் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 45 வயதான சுப்ரதா கோஷ், 8,849 மீட்டர் சிகரத்தை அடைந்து திரும்பும் போது ஹிலாரி படிக்கு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் பற்றிய விபரங்கள் தெரியவரவில்லை. அதேநேரம் இந்திய வீரரின் உடலை அடிப்படை முகாமுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அவரது மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் அறியப்படும்” என்று பண்டாரி கூறினார்.





