ஆஸ்திரேலியா செய்தி

விக்டோரியாவில் ஏடிஎம் கொள்ளை ; இருவர் கைது

விக்டோரியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஏடிஎம் இயந்திரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் முதல் ஒன்பது இடங்களில் திருடப்பட்ட இழுவை லொரிகளை (Tow Trucks) பயன்படுத்தி, வணிக நிறுவனங்களின் சுவர்களை உடைத்து இவர்கள் ஏடிஎம்களை திருடியுள்ளனர்.

இதில் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஃபேர்ஃபீல்ட் (Fairfield) மற்றும் பென்ட்லீ ஈஸ்ட் (Bentleigh East) உள்ளிட்ட பகுதிகளில் நான்கு ஏடிஎம்கள் திருடப்பட்ட நிலையில், இது தொடர்பாக 34 மற்றும் 31 வயதுடைய இருவர் மீது 11-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருடப்பட்ட 7 லாரிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வழக்கில் மேலும் பல கைது நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!