உக்ரைனின் பாக்முட் மீது ரஷ்யா நடத்திய தாக்கியதில் இரு கனேடியர்கள் பலி!
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பாக்முட்டில் இரண்டு கனேடியர்கள் கொல்லப்பட்டதாக கனேடிய ஊடகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது, தற்போது பாக்மூட்டை முழுமையாக கைப்பற்ற ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.இதனை தொடர்ந்து ரஷ்யாவால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட்டில், இரண்டு கனேடியர்கள் கொல்லப்பட்டதாக கனேடிய ஒளிபரப்பு சேனல் சிபிசி செய்தி தெரிவித்துள்ளது.
கனடா நாட்டின் கால்கேரியைச் சேர்ந்த கைல் போர்ட்டர்(27), மற்றும் கோல் ஜெலென்கோ(21) ஆகிய இருவரும் 92வது இயந்திரமயமாக்கப்பட்ட ராணுவ அணியுடன் இணைக்கப்பட்ட உக்ரைனின் சர்வதேச படைப்பிரிவில் பணியாற்றினர். இந்த இருவரும் ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களில் ஒருவர் இறப்பதற்கு முன் சிபிசி செய்தியுடன் தொடர்பு கொண்டிருந்தார். மேலும் அப்பகுதியில் நடந்த காட்சியை “இறைச்சி வேட்டை” என்று கூறியுள்ளார்.மேலும் அங்கு உயிர் வாழ்வது மிக கடினம் என கூறியுள்ளார். உக்ரைனிலுள்ள கனேடிய ராணுவக்குழுவின் தலைவர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், கனேடியர்கள் பாக்முட்டிற்கு முக்கியமான விநியோக பாதையை வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெரிய படைவீரர் குழுவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றனர்.
பாக்முட்டில் ரஷ்யப் படைகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன, ஆனால் உக்ரைன் பாதுகாப்பு படை ராணுவ வீரர்களுக்கு தனது உணவு, வெடிமருந்துகள் மற்றும் மருந்துகளை வழங்குவது இன்னும் சாத்தியம் என்று கூறியுள்ளது.இந்நிலையில் கடந்த ஆண்டு, ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள பகுதிகளை, மீட்பதற்கான எதிர் தாக்குதலை உக்ரைன் விரைவில் தொடங்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.