புகைப்பட தொகுப்பு

மன்னாரில் 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் சிக்கிய இருவர்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று (1) சனிக்கிழமை மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற போது வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 85 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 35 வயதுடைய மன்னார் பேசாலை,மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்களும்,மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள்,வாகனம்,மோட்டார் சைக்கிள் ஆகியவை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 27 times, 1 visits today)

MP

About Author

error: Content is protected !!