தங்கம் கடத்தல்: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருவர் கைது!

இலங்கைக்கு தங்கப் பொருட்களை கடத்த முயன்ற இருவர் இலங்கை வந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சம்மாந்துறையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரும், கல்முனையைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 14 வளையல்கள், மூன்று சங்கிலிகள், மூன்று மோதிரங்கள் மற்றும் ஒரு ஜோடி காதணிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 13 times, 1 visits today)