தனியார் வங்கிகளில் இரண்டு கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான இரண்டு தனியார் வங்கிகளில் வைத்திருந்த கணக்குகளுக்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு தடை விதித்துள்ளது.
“ஹிக்கடுவையைச் சேர்ந்த இஸ்ஸோ சுஜி” என அழைக்கப்படும் குணரத்ன சுஜித் சில்வாவின் வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த கணக்குகளில் 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் தற்போது காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாணந்துறை நல்லுருவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபருடையது என குறித்த கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 10 times, 1 visits today)