செய்தி

70 வயதில் இரட்டைக் குழந்தைகள் – உகண்டாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய பெண்

உகண்டாவில் 70 வயதுப் பெண் இரட்டைக் குழந்தைகளை பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தலைநகர் காம்பாலாவில் உள்ள மருத்துவ நிலையத்தில் சபினா நமுக்வாயா (Safina Namukwaya) பிள்ளைகளைப் பெற்றார்.

கருவுறுதல் சிகிச்சை பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.70 வயதில் இரட்டைப் பிள்ளைகள் பெற்றது மாபெரும் சாதனை என பெண்ணின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இரட்டையர்களில் ஒன்று ஆண் பிள்ளை. இன்னொன்று பெண் பிள்ளை. தாயும் பிள்ளைகளும் நலமாக இருப்பதாகவும் அவர்கள் நிலையத்தில் இருப்பதாகவும் மருத்துவர் சொன்னார்.

“70 வயதில் தம்மால் கர்ப்பமாகவோ குழந்தையைப் பார்த்துக்கொள்ளவோ முடியாது என்பார்கள். இப்போது எனக்கு இரட்டைப் பிள்ளைகள் உள்ளனர்” என தாயார் நமுக்வாயா குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு நமுக்வாயா பெண் குழந்தையைப் பெற்றார். அதற்கு முன்பு அவருக்குப் பிள்ளை இல்லை.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி