துனிசியாவில் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்தவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஜனாதிபதி கைஸ் சயீத்தை(Kais Saied) விமர்சித்ததற்காக அறியப்பட்ட முன்னாள் நிர்வாக நீதிபதியான அகமது சயீத்துக்கு(Ahmed Saied) துனிசிய நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
முன்னாள் நிர்வாக நீதிபதியான அகமது சயீத், துனிஸில்(Tunis) உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
நீதித்துறையை விமர்சிக்கும் கருத்துகளுக்காகவும், நாட்டின் நீதிபதிகள் தலையில் கத்தியுடன் வேலை செய்வதாக விவரித்ததற்காகவும் ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
2021ம் ஆண்டில் ஜானதிபதி கைஸ் சயீத் பரந்த அதிகாரங்களைக் கைப்பற்றி, நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஆணையின் மூலம் ஆட்சி செய்ததிலிருந்து, அவர் நீதித்துறையின் சுதந்திரத்தை அழித்துவிட்டதாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.





