ஜப்பானின் இவாட் (Iwate) மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை!
ஜப்பானின் இவாட் (Iwate) மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவானதைத் தொடர்ந்து மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவாட் கடற்கரையில் ஒரு மீட்டர் (3 அடி) வரை அலைகள் எழக்கூடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதேவேளை நேற்று மற்றும் அதற்கு முன்தினத்தில் வடக்கு பசிபிக் பெருங்கடலில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன. குறைந்தது 05 நிலநடுக்கங்கள் பதிவானதான மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 3 visits today)




