உலகம் செய்தி

ட்ரம்பின் எச்சரிக்கை – நைஜீரியாவில் துருப்புகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை நைஜீரியா நிறுத்தாவிட்டால், அமெரிக்க இராணுவம் களமிறக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், பயங்கரவாதங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிப்பதாக அந்நாட்டு இராணுவ தலைவர் உறுதியளித்துள்ளார்.

நைஜீரியாவின் போர்னோ (Borno) மாநிலத்தின் தலைநகரான மைடுகுரியில் (Maiduguri) பேசிய இராணுவத் தளபதி (COAS), லெப்டினன்ட் ஜெனரல் வைதி ஷைபு (Waidi Shaibu) புதிய முயற்சி வெற்றிபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தசாப்த கால மோதலின் ஒரு முக்கியமான கட்டத்தில் இராணுவம் நுழைவதால் தோல்வி “ஒரு விருப்பமல்ல” என்றும் அவர் கூறியுள்ளார்.

“பயங்கரவாதிகளை தோற்கடிக்க “அனைத்து போர் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. புதிய தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, அனைத்தும் நீங்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காகவே” என அவர் தனது துருப்புக்களிடம் கூறியுள்ளார்.

நைஜீரியாவில் 220 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சமமான சனத்தொகையை கொண்டுள்ளனர்.

இதில் போகோ ஹராம் (Boko Haram)தீவிரவாதக் குழுவும் அடங்கும், இது இஸ்லாமிய சட்டத்தின் தீவிர விளக்கத்தை நிறுவ முயல்கிறது, மேலும் அது போதுமான அளவு முஸ்லிம் அல்ல என்று கருதும் முஸ்லிம்களையும் குறிவைத்துள்ளது.

வளங்கள் பற்றாக்குறை இரு சமூகத்தையும் பாதிக்கும் தேசிய பிரச்சினையாக கருதப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!