செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்பின் வெற்றி – ஒரே இரவில் மாறிய தங்கத்தின் விலை

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டெனால்ட் ட்ரம்பின் வெற்றியுடன், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை மாற்றமடைந்துள்ளது.

தங்கத்தின் விலையானது ஒரே இரவில் 2% சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேசச் சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது நேற்று 2,655.31 அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகின்றது.

நேற்றையதினம் 2,737.33 அமெரிக்க டொலர்களாக இருந்தது.

இது கடந்த மூன்று வாரங்களில் தங்கத்தின் விலையானது 2,700 அமெரிக்க டொலர்களுக்கு கீழ் பதிவான முதல் சந்தர்ப்பமாகும்.

இதேவேளை, கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்றைய தினம் சடுதியாக குறைந்துள்ளது.

24 கரட் தங்கம் 215,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 199,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

நேற்றைய தினம் 24 கரட் தங்கம் 218,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 201,000 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

(Visited 53 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி