டிரம்ப் அறிவிக்க தயாராகும் வரிகள் – சர்வதேச அளவில் அதிகமாகியுள்ள எதிர்பார்ப்புகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அறிவிக்கவுள்ள புதிய வரித் திட்டங்கள் தொடர்பில் சர்வதேச அளவில் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன.
அமெரிக்காவின் புதிய வரித் திட்டம் நடைமுறைக்கு வரும் நாளை விடுதலை தினம் என டிரம்ப் பெயர் சூட்டியுள்ளார். வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மீது வரி விதிக்கப்படும் என்று அவர் கூறிவருகிறார்.
வரித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் அவை உடனடியாக நடப்புக்கு வரும் என்று வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கேரொலைன் லெவிட் தெரிவித்தார்.
அதன் மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை. வரித்திட்டங்கள் குறித்துத் தொலைபேசி வழியாகப் பேசுவதற்கு ஜனாதிபதி டிரம்ப் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் வரித் திட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாகக் கனடாவும் மெக்சிகோவும் உள்ளன.
(Visited 8 times, 1 visits today)