ட்ரம்பின் பதவியேற்பு : அமெரிக்க எதிர்ப்பு கொள்கையை கடுமையாக்கும் வடகொரியா!
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், “கடுமையான” அமெரிக்க எதிர்ப்பு கொள்கையை அமல்படுத்தப்போவதாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மிரட்டல் விடுத்துள்ளார்.
டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்புவது வட கொரியாவுடனான உயர்மட்ட இராஜதந்திரத்திற்கான வாய்ப்புகளை எழுப்புகிறது.
அவரது முதல் பதவிக் காலத்தில், வடக்கின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்காக கிம்மை மூன்று முறை சந்தித்திருந்தமையும் நினைவுக்கூறத்தக்கது.
ஆனால் உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மோதல்களில் டிரம்ப் முதலில் கவனம் செலுத்துவதால், கிம்-ட்ரம்ப் உச்சிமாநாட்டை விரைவாக மீண்டும் தொடங்குவது சாத்தியமில்லை என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு வட கொரியாவின் ஆதரவு, இராஜதந்திரத்தை புதுப்பிக்கும் முயற்சிகளுக்கு சவாலாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிம் பாதுகாப்பு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் இராணுவத் திறனை உயர்த்துவதற்கான பணிகளை அமைத்துள்ளதாகவும், வட கொரிய வீரர்களின் மன உறுதியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.