ட்ரம்பின் நம்பிக்கை – அமைதி ஒப்பந்தத்தை கடைப்பிடிக்குமா தாய்லாந்து?
கம்போடியாவும், தாய்லாந்தும் தங்கள் போர் நிறுத்த உறுதிமொழிகளை “முழுமையாக மதிக்கும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார்.
கம்போடியாவுடனான (Cambodia) சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் தாய்லாந்து இராணுவத்தினர் நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் ஒரு சிப்பாய் உள்பட நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் ஏராளமான மக்கள் பாதுகாப்பு தேடி இடம்பெயரவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ட்ரம்பின் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்ட அமைதி ஒப்பந்தம் பலவீனமான நிலையை எட்டியது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க அதிகாரி ஒருவர், வன்முறையைத் தொடர்ந்து நிறுத்துவதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் உறுதிபூண்டுள்ளார்.
மேலும் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தங்கள் உறுதிமொழிகளை கம்போடியா மற்றும் தாய்லாந்து அரசாங்கங்கள் முழுமையாக மதிக்கும் என்று எதிர்பார்க்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.




