ட்ரம்பின் அதிரடி உத்தரவு : போராட்டம் நடத்தினால் நிதி இரத்து செய்யப்படும்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சட்டவிரோத போராட்டங்களை” அனுமதிக்கும் பள்ளிகளுக்கான நிதியைக் குறைப்பதாகக் அறவித்துள்ளார்.
“சட்டவிரோத போராட்டங்களை அனுமதிக்கும் எந்தவொரு கல்லூரி, பள்ளி அல்லது பல்கலைக்கழகத்திற்கும் அனைத்து மத்திய நிதியும் நிறுத்தப்படும்” என்று அவர் தனது ட்ரூத் சமூக தளத்தில் எழுதினார்.
திருநங்கை விளையாட்டு வீரர்கள் பெண்கள் விளையாட்டு அணிகளில் போட்டியிட அனுமதித்தால் அல்லது கோவிட்-19 தடுப்பூசி ஆணைகளை வலியுறுத்தினால், பாலினம் மற்றும் இனம் குறித்த போதனைகளுக்காக அமெரிக்க கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான அரசாங்க நிதியைக் குறைப்பதாக குடியரசுக் கட்சி முன்பு அச்சுறுத்தியுள்ளது.
“போராட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்/அல்லது அவர்கள் நாட்டிற்கு நிரந்தரமாக திருப்பி அனுப்பப்படுவார்கள். அமெரிக்க மாணவர்கள் நிரந்தரமாக வெளியேற்றப்படுவார்கள் அல்லது குற்றத்தைப் பொறுத்து கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.