வட அமெரிக்கா

அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு இந்தியா வரி விதித்தால், இந்தியாவுக்கும் அமெரிக்கா வரி விதிக்குமென அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பேசிய டிரம்ப், “சில அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. அதனால், அமெரிக்காவும் சில இந்திய பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கும்,” என்றும் கூறினார்.

“அவர்கள் எங்களுக்கு வரி விதித்தால், அவர்களுக்கு அதே அளவு வரியை நாங்கள் விதிக்க முடிவு செய்துள்ளோம். அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள், நாங்கள் வரி விதிக்கிறோம். அனைத்து விதங்களிலும் அவர்கள் எங்களுக்கு வரி விதிப்பதால்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்,” என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

பரஸ்பரம் என்ற சொல் மிகவும் முக்கியமானது. “இந்தியா எங்களுக்கு 100% வரி வசூல் செய்தால், நாங்களும் அதேபோல் 100% அவர்களிடம் வரி வசூல் செய்யப்போகிறோம். அவர்கள் ஒரு சைக்கிளை அனுப்புகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் அவர்கள் 100 % வரி வசூலிக்கின்றனர். அதேபோல நாங்களும் அவர்களிடம் வரி வசூலிப்போம்,” என்று அவர் கூறியுள்ளார்.

“இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் எங்களிடம் அதிக வரி வசூல் செய்கின்றன, பரவாயில்லை. ஆனால் நாங்களும் அவர்களிடம் அதேபோல் வரி வசூல் செய்யப்போகிறோம்,” என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!