வெனிசுலாவை பழிவாங்க சீனா மீது கை வைத்த ட்ரம்ப்!
வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி மீது கட்டுப்பாடுகளை விதிக்க தவறியமைக்காக ஹொங்கொங் மற்றும் சீனாவின் பிரதான நிலப்பகுதியை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அமெரிக்க கரூவூலத்துறை சீனாவிற்கு சொந்தமான நான்கு நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் டேங்கர் கப்பல்களையும் தடை பட்டியலில் சேர்த்துள்ளது.
வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி விநியோகத்தில் மிகப் பெரிய வாடிக்கையாளராக சீனா காணப்படுகிறது. வெனிசுலாவின் வருமானத்தில் 95 சதவீதம் பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வெனிசுலா மீது அழுத்தத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் முயற்சியின் ஒரு பகுதியாக மேற்படி சீன நிறுவனங்களையும் தடை பட்டியலில் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





