க்ரீன்லாந்தை கைப்பற்ற முயற்சிக்கும் ட்ரம்ப் : ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்த பிரதமர்!
அமெரிக்காவில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப் க்ரீன்லாந்தை கைப்பற்ற முயற்சிப்பதை அடுத்து புவிசார் அரசியல் போரில் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் குடிமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று வலியுறுத்தி ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டைப் பெற இராணுவ மற்றும் பொருளாதார பலத்தைப் பயன்படுத்துவதை நிராகரிக்க மறுத்ததை அடுத்து மக்கள் கவலைப்படக்கூடும் என்று தான் புரிந்துகொண்டதாக மியூட் எகெட் கூறினார்.
ஆகையால் தனது சக குடிமக்கள் “வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக நிற்க” அழைப்பு விடுத்தார்.
அவரது அரசாங்கம் கிரீன்லாந்தின் சுயநிர்ணய உரிமையை மீண்டும் வலியுறுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டது, மேலும் டிரம்ப் நிர்வாகத்துடன் “தொடர்பை ஏற்படுத்த எதிர்நோக்குகிறது” என்றும் கூறினார்.