தென்கொரியா மீதான வரி விதிப்பை 25% அதிகரிக்கும் ட்ரம்ப் : பங்குச் சந்தை சரிவு!
கடந்த ஆண்டு எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்திற்கு சியோல் “இணங்கவில்லை” என்று குற்றம் சாட்டிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தென் கொரிய இறக்குமதிகள் மீதான வரிகளை 25% ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆட்டோமொபைல்கள், மரம், மருந்துகள் மற்றும் “மற்ற அனைத்து பரஸ்பர வரிகள்” உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளில் தென் கொரியா மீதான வரிகளை 15% இலிருந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை வரிகளை உயர்த்தும் முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக வாஷிங்டனுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் தென்கொரியா கூறுகிறது.
தற்போது கனடாவில் உள்ள தென் கொரியாவின் தொழில்துறை அமைச்சர் கிம் ஜங்-க்வான் (Kim Jung-kwan), அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கை (Howard Lutnick) சந்திக்க விரைவில் வொஷிங்டனுக்கு வருவார் என்றும் அது மேலும் கூறியது.
மேலும் ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கையை தொடர்ந்து தென்கொரியாவின் பங்குள் சரிந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவித்துள்ளன. கார் தயாரிப்பாளர் ஹூண்டாய் சுமார் 2.5% சரிந்தது. மருந்துகள் மற்றும் மரக்கன்றுகள் தொடர்பான பங்குகளும் குறைவாகவே இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





