கியூபாவை மிரட்டும் ட்ரம்ப் : ஒப்பந்தம் இல்லையேல் எண்ணெயும் இல்லை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கியூபா ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் குறிப்பிடப்படாத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இன்று தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், ஹவானாவிற்கு (Havana) எண்ணெய் விநியோகம் செய்வது இப்போது நிறுத்தப்படும் என கூறியுள்ளார்.
நிக்கலோஸ் மதுரோ அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்ட நேரத்தில் பெரும்பாலான கியூப பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கியூபா பல ஆண்டுகளாக வெனிசுலாவிலிருந்து அதிக அளவு எண்ணெய் மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டதாகவும், அதற்கு பிரதியீடாக வெனிசுலாவின் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு சேவையை வழங்கியது. ஆனால் இனிமேல் இல்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.





