புளோரிடாவில் இடம்பெற்ற பேரணியில் பைடனை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்!
மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மீண்டும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றிப்பெறச் செய்து மக்கள் தன்னை மீண்டும் வெள்ளை மாளிகைக்கு அனுப்புவார்கள் என நம்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புளோரிடாவின் ஹியாலியாவில் பேரணி ஒன்றை நடத்திய அவர், GOP விவாதம் குறித்தும், மற்ற போட்டியாளர்கள் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.
குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட விவாதத்தைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக தனது சொந்த நிகழ்வை நடத்த டிரம்ப் விருப்பம் தெரிவித்திருப்பது இது மூன்றாவது முறையாகும்.
“நான் இப்போது பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் நிற்கிறேன், அது தொலைக்காட்சியில் உள்ளது. ஒரு விவாதத்தை விட இது மிகவும் கடினமானது என மக்கள் முன்னிலையில் ட்ரம்ப் உரையாற்றினார்.
மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் தற்போதைய ஜனாதிபதியான பைடனின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.