உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணையும் அமெரிக்கா – ட்ரம்ப் வெளியிட்ட கருத்து!
உலக சுகாதார அமைப்பில் மீண்டும் உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக டொனால்ட் டிரம்ப் நேற்று (26) தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் முடிவு செய்தார்.
இருப்பினும், அமெரிக்கா நாட்டிற்கு வழங்கி வந்த உதவியை ஒரே நேரத்தில் நிறுத்தியதால் உலகம் முழுவதும் எதிர்ப்புகள் வெடித்தன.
அடுத்த ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலக திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அதன் மறுபிரவேசம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்த கருத்துகளும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.
(Visited 43 times, 1 visits today)





