வெனிசுலாவில் இராணுவ நடவடிக்கை -32 கியூபர்கள் உயிரிழந்ததாக கியூபா குற்றச்சாட்டு
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய இராணுவ நடவடிக்கை நடந்த வேளை வெனிசுலாவில் இருந்த கியூபா நாட்டவர்கள் 32 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை கராகஸில் உள்ள மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸின் இல்ல வளாகத்தில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதாக கியூபா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் 32 கியூப நாட்டவர்கள் உயிரிழந்ததாக கியூபா அரசு தெரிவித்துள்ளது.
அவர்கள் வெனிசுலா அரசுக்கு பாதுகாப்பு உதவி பணியில் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இதேவேளை மதுரோ கைது செய்யப்பட்டிருந்தாலும், அவரது ஆட்சியுடன் தொடர்புடைய பல அதிகாரிகள் இன்னும் பதவியில் உள்ளதாகவும், நாட்டில் பயமும் மிரட்டலும் தொடர்வதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், வெளிநாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, இந்த கைது “சுதந்திரத்திற்கும் மனித கண்ணியத்திற்கும் ஒரு முக்கிய முன்னேற்றம்” எனக் கூறினார்.





