நைஜீரியாவிற்கு துருப்புக்களை அனுப்ப தயாராகும் ட்ரம்ப் – அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
நைஜீரியாவில் (Nigeria)இஸ்லாமிய தீவிரவாதிகளை ஒழிக்க இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தீவிரவாதக் குழுக்கள் நைஜீரியாவில் (Nigeria) கிறிஸ்தவர்களைக் கொன்று அவர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து வருகின்றன, ஆனால் நைஜீரிய (Nigeria) அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்று ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்க தாக்குதல்கள் விரைவாகவும் கடுமையாகவும் மாறுவதற்கு முன்பு நைஜீரிய (Nigeria)அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுப்பது நல்லது என்று டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இல்லையென்றால் நைஜீரியாவிற்கான அனைத்து அமெரிக்க உதவிகளும் நிறுத்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
(Visited 3 times, 3 visits today)





