லிபியாவில் 10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக குடியமர்த்த திட்டமிடும் ட்ரம்ப்

லிபியாவில் பாலஸ்தீனியர்களில் நிரந்தரமாக குடியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் 10 லட்சம் பேரை அவர் இவ்வாறு குடியமர்த்த திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக லிபியாவுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், பாலஸ்தீனியர்களை லிபியா ஏற்றுக்கொண்டால் அந்நாட்டின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)