5 மாதங்களில் 5 போர்களை நிறுத்திவிட்டதாக டிரம்ப் மீண்டும் தம்பட்டம்
கடந்த 5 மாதங்களில் 5 போர்களை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
இதில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போதும் அடங்குவதாக கூறியுள்ளார்.
இந்தியா, பாக் சண்டையை தலையிட்டு நான்தான் நிறுத்தினேன் என டிரம்ப் கூறினார். பலமுறை இதுபோன்ற அறிவிப்பை டிரம்ப் வெளியிட மத்திய அரசு தரப்பில் அதற்கும் மறுப்பும் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் கடந்த 5 மாதங்களில் 5 போர்களை நான் நிறுத்தினேன் என்று டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். அவர் கூறுகையில்,
கடந்த ஐந்து மாதங்களில் நான் ஐந்து போர்களை நிறுத்தினேன். உக்ரைன் போர் ஆறாவது முறையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா பாக் போரையும் நிறுத்தி உள்ளேன். முழு பட்டியலையும் மேலோட்டமாகப் பார்க்க முடியும். ஆனால் அந்தப் பட்டியல் என்னைப் போலவே உங்களுக்கும் நன்றாகத் தெரியும் என்றார்.





