அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிப்பெற வேண்டும் – லிஸ் ட்ரஸ் வலியுறுத்தல்!

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற வேண்டும் என பிரித்தானிய முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் டிரம்புடன் “உலகம் பாதுகாப்பானது” என்று அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் மிகக் குறுகிய காலம் பிரதமராக பதவி வகித்த ட்ரஸ், மோதல்களால் உலகம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், முன்பை விட இப்போது “வலுவான அமெரிக்கா” தேவைப்படுவதாகவும் கூறுகிறார்.
நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
(Visited 11 times, 1 visits today)