இந்தியாவை மீண்டும் சீண்டும் ட்ரம்ப் – வரி விதிப்பை அதிகரிக்கபோவதாக மிரட்டல்!
அமெரிக்கா- இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தது.
ஆனால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. அதற்கு மாறாக இந்தியா ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சாய் எண்ணெய் கொள்வனவு செய்வதோடு, அதனை அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.
ரஷியா தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு கவலை இல்லை.
இதன் காரணமாக நான் இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்பை கணிசமான அளவில் உயர்த்த இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.





