காசாவின் அமைதி குழுவில் இணைய இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்
அமெரிக்காவின்(America) முயற்சியால் ஹமாஸ்(Hamas) மற்றும் இஸ்ரேல்(Israel) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவித்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக ஆலோசனை நடத்த ஒரு குழுவை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) அமைத்து வருகிறார்.
இந்நிலையில், இந்த குழுவில் இடம் பெற இந்தியாவிற்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிரம்பின் இந்த அழைப்பிற்கு இதுவரை இந்திய தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வழங்கப்படவில்லை.
இந்த குழுவிற்கு உறுதிப்படுத்தப்பட்ட உறுப்பினர்களில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ(Marco Rubio), டிரம்பின் சிறப்பு பேச்சுவார்த்தையாளர் ஸ்டீவ் விட்காஃப்(Steve Witkoff), முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர்(Tony Blair), பில்லியனர் நிதியாளர் மார்க் ரோவன்(Mark Rowan), உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா(Ajay Banga) மற்றும் மூத்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் உதவியாளர் ராபர்ட் கேப்ரியல்(Robert Gabriel) ஆகியோர் அடங்குவர்.
மேலும், இந்தியாவைத் தவிர அர்ஜென்டினா(Argentina), கனடா(Canada), எகிப்து(Egypt), துருக்கி(Turkey), அல்பேனியா(Albania), பாகிஸ்தான்(Pakistan) மற்றும் சைப்ரஸ்(Cyprus) உள்ளிட்ட பல நாடுகள் அழைக்கப்பட்டுள்ளன.





