துரிதமாக விசா வழங்கும் தங்க அட்டை (Gold Card) திட்டத்தை அறிமுகம் செய்த ட்ரம்ப்!
குறைந்தபட்சம் $1 மில்லியன் (£750,000) செலுத்தக்கூடிய பணக்கார வெளிநாட்டினருக்கு உடனடியாக விசா வழங்கும் திட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த அட்டையை கொள்வனவு செய்பவர்களுக்கு விரைவான மற்றும் தகுதியான குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை ட்ரம்ப் நேற்று சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இந்த தங்க அட்டை ( Gold Card) திட்டமானது அமெரிக்காவிற்கு நன்மையை அளிக்கக்கூடியவர்களுக்கு மட்டும் உரித்துடையதாகும்.
இத்திட்டத்தின் படி தனிநபருக்கு $1 மில்லியன் அமெரிக்க டொலரும், ஊழியர்களை ஆதரிக்கும் வணி நிறுவனங்கள் $2 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் செலுத்த வேண்டும்.
அதேபோல் பிளாட்டினம்” பதிப்பு 05 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விரைவில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விண்ணப்பதாரரின் சூழ்நிலையைப் பொறுத்து அரசாங்கம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தனிநபர்கள் தங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்வதற்கு முன்பு திருப்பிச் செலுத்த முடியாத $15,000 செயலாக்கக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.





