அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு தாய்லாந்து, கம்போடியா மீது டிரம்ப் 19% வரியை விதித்த அமெரிக்கா

அமெரிக்கா அதிபர் டோனல்ட் டிரம்ப், தாய்லாந்து, கம்போடியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள்மீது 19% வரியை விதித்துள்ளார். இதற்குமுன் 36% வரியை விதிக்கப்போவதாக அவர் கூறியிருந்தார்.
தாய்லாந்தும் கம்போடியாவும் மோசமான எல்லைப் பூசலை நிறுத்தாவிட்டால் அவற்றுடனான வர்த்தக உடன்பாடுகளை முடக்கப்போவதாகவும் டிரம்ப் ஜூலை மாதம் எச்சரித்திருந்தார்.
இவ்வாரத் தொடக்கத்தில் தாய்லாந்தும் கம்போடியாவும் சண்டைநிறுத்தத்திற்கு உடனடியாக ஒப்புக்கொண்டன. பத்தாண்டுகளில் இல்லாத வகையில் நடைபெற்ற இருநாட்டு மோதலில் 40க்கும் அதிகமானோர் உயி,இழந்தனர்.
கம்போடியாமீது அமெரிக்கா விதித்த 19% வரி மக்களுக்கும் நாட்டின் பொருளியலுக்கும் நற்செய்தி என்று கம்போடியப் பிரதமர் ஹன் மனெட் கூறினார்.தாய்லாந்து 19% வரியை ஒரு மிகப்பெரிய வெற்றி என வருணித்து வரவேற்றது.
தாய்லாந்து, கம்போடியா ஆகிய இருநாடுகளுடனும் உடன்பாடுகளை உறுதிப்படுத்தியதாக அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லியுட்னிக் வியாழக்கிழமை இரவு (ஜூலை 30) அறிவித்தார்.
2024ஆம் ஆண்டில் தாய்லாந்தின் ஆகப் பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா இருந்தது. நாட்டின் மொத்த ஏற்றுமதிகளில் 18% அமெரிக்காவுக்குச் சென்றது.இதற்கிடையே, ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டோன் ஃபரெல், ஆஸ்திரேலியாவைவிட வேறு எந்த நாட்டுக்கும் குறைவான அளவில் பதில் வரி விதிக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியா மீது விதிக்கப்பட்ட அடிப்படை 10% வரியை டிரம்ப் மாற்றவில்லை என்றார் ஃபரெல்.“அமெரிக்காவின் புதிய வரி விதிப்பை ஏற்றுக்கொண்டாலும் எங்கள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஏற்ப அனைத்து வரிகளையும் நீக்க தொடர்ந்து முயல்வோம்,” என்று ஃபரெலின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் உபரியைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுடனான அமெரிக்க வர்த்தக உபரி $17.9 மில்லியன் டாலர்.அண்டை நாடான நியூசிலாந்துமீதான அடிப்படை வரியை 10% – 15% அமெரிக்கா உயர்த்தியுள்ளது.