உலகம்

இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தேன் – 7வது முறையாக கூறிய டிரம்ப்

ந்தியா- பாகிஸ்தான் மோதலை நான்தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தொடர்ச்சியாக 7வது முறையாக தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, டிரம்பை சந்திக்க அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு சென்றிருந்தார்.

அவர்களது சந்திப்பு நடந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், “நாங்கள் இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்தில் என்ன செய்தோம் என்பதை பாருங்கள். அந்த விவகாரத்தை முழுமையாக தீர்த்து வைத்தோம்.

அதை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்தேன். விரைவில் உக்ரைன்- ரஷ்யா மோதலையும் விரைவில் முடிவுக்கு கொண்டு வர போகிறேன். இது மட்டுமின்றி, இந்தியாவுடன் ஒரு மிக பெரிய ஒப்பந்தத்தை தயார் செய்து வருகிறேன்” என்றார்.

சமீபத்தில் சவுதிக்கு சென்றபோதும்கூட இந்தியா-பாகிஸ்தான் மோதலை நான்தான் முடிவுக்கு வந்தேன் என்று பேசியிருந்தார். அதேநேரம் ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் அமெரிக்கா உட்பட எந்த ஒரு வெளிநாடுகளின் தலையீடுகளும் இல்லை என்பதை தொடர்ந்து மறுத்தே வருகிறது. இந்த வார தொடக்கத்தில்கூட, வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்ற குழுவிடம் இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்