எல்லை பாதுகாப்பு விடயத்தில் கடுமையான நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் ட்ரம்ப்!
உலகளாவிய ரீதியில் எல்லை பாதுகாப்பு பிரச்சினை முக்கிய விடயமாக மாறியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் பல தங்கள் நாட்டின் எல்லைகளை பாதுகாக்க கணிசமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அத்துடன் பல நாடுகள் புலம்பெயர்வோருக்கு எதிரான மனநிலையை கொண்டுள்ளதையும் அண்மைய நாட்களாக அவதானிக்க முடிகிறது.
அந்தவகையில் அமெரிக்காவின் எல்லைகளை பாதுகாக்க ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அவருடைய தேர்தல் பிரச்சார கொள்கைகளிலும் எல்லை பாதுகாப்பு விடயம் முக்கியத்துவம் பெற்றுள்ளதை காண முடிகிறது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புலம் பெயர்வோரை குறைக்கும் திட்டத்திற்கு முன்மொழிந்துள்ளார்.
இதனை தனது X பக்கத்தில் முன்னுதாரணமாக குறிப்பிட்டுள்ள ட்ரம் தங்கள் நாட்டின் எல்லைகளை பாதுகாக்க அழைப்பு விடுத்துள்ளார்.
(Visited 2 times, 1 visits today)