ட்ரம்ப் மற்றும் ஜப்பானிய பிரதமர் சந்திப்பு : அமெரிக்காவின் வரிகொள்கையில் இருந்து தப்பிக்குமா ஆசிய நாடுகள்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவை முதல் முறையாக சந்திக்கிறார்.
அதிகரித்து வரும் வர்த்தகப் போர் உலகப் பொருளாதாரத்தை சிதைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள வேலையில் அவர்களின் இந்த சந்திப்பு வந்துள்ளது.
பதவியேற்ற முதல் மூன்று வாரங்கள் விதிமுறைகளைத் தகர்த்தெறிந்து, ஒட்டாவா முதல் பொகோட்டா வரையிலான வெளிநாட்டுத் தலைநகரங்களை உலுக்கிய டிரம்ப், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வாஷிங்டனின் நீண்டகால ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளிடம் மிகவும் வழக்கமான அணுகுமுறையை எடுத்துள்ளார்.
ஆனால் அந்த நட்புறவுகள், ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு எதிரான வரிகள் மற்றும் சீனாவுடனான முறுகள் நிலை ஆகியவைகளால் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான மோதலில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் டிரம்ப் 10% வரி விதித்தார், இதை அவர் “திறப்புத் தாக்குதல்” என்று அழைத்தார்.
இந்நிலையில் தற்போதைய சந்திப்பு முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.