அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்கிறார்கள்’: புடின்-ஷி-கிம் மீது டிரம்ப் குற்றம் சாட்டு

அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்யும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோரை சீனாவில் வரவேற்றதற்காக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
வெற்றி தினத்தைக் கொண்டாடும் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்க புட்டினும் கிம்மும் தற்போது சீனாவில் உள்ளனர்.
அவர் தனது சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
“மிகவும் நட்பற்ற வெளிநாட்டு படையெடுப்பாளரிடமிருந்து சீனாவை விடுவிப்பதற்காக அமெரிக்கா வழங்கிய மகத்தான ஆதரவையும் ‘இரத்தத்தையும்’ சீன அதிபர் ஜி குறிப்பிடுவாரா இல்லையா என்பதுதான் பதிலளிக்கப்பட வேண்டிய மிகப்பெரிய கேள்வியாகும். சீனாவின் வெற்றியின் மகிமைக்காக பல அமெரிக்கர்கள் இறந்தனர். அவர்களின் துணிச்சல் மற்றும் தியாகத்திற்காக அவர்கள் முறையாகக் கௌரவிக்கப்படுவார்கள், நினைவுகூரப்படுவார்கள் என்று நம்புகிறேன்! ஜனாதிபதி ஜி மற்றும் சீனாவின் அற்புதமான மக்களுக்கு ஒரு சிறந்த மற்றும் நீடித்த நினைவு நாள் அமையட்டும். அமெரிக்காவிற்கு எதிரான உங்கள் சதித்திட்டத்திற்காக விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுங்கள்.”