ஐவரி கோஸ்ட்டில் லாரியும், பேருந்தும் மோதி கோர விபத்து : 15 பேர் பலி, பலர் காயம்!
ஐவரி கோஸ்ட்டில் ஒரு சரக்கு லாரியும் பயணிகள் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 23 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டின் மேற்கே உள்ள போனன்-ஓயின்லோ என்ற கிராமத்தில் இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்டதாக, தேசிய சிவில் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதற்கான காரணம் குறித்து எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த பிராந்தியமான “குமோனின் சிவில் தீயணைப்பு வீரர்கள்”, “பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ள சம்பவ இடத்தில் உள்ளனர்” என்று தேசிய சிவில் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)