இலங்கை

எட்டு பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்துள்ள திருகோணமலை நீதிமன்றம்

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் கட்டை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு திருகோணமலை நீதிமன்றம் எட்டு பேருக்கு எதிராக தடைவுத்தரவு பிறப்பித்துள்ளது.இத்தடை உத்தரவினை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பி.அன்பார் வழங்கியுள்ளார்.

நிலாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி கல்லெலுகே தொன் பிரதீப் நிஷாந்தகுமார திருகோணமலை நீதிமன்றத்திற்கு 1979ம் ஆண்டு 15ம் இலக்க 106/1 என்ற சட்டத்தின் பிரகாரம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

திருகோணமலை-இலுப்பை குளம் பொரலுகந்த ரஜமஹா விகாரை நிர்மாண பணிகளை முன்னெடுக்க வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தடை விதித்திருந்த போதிலும் குறித்த கட்டுமான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் குறித்த நிர்மான பணிகளை நிறுத்துமாறு கோரி இன்றைய தினம் ( 01) பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படயிருந்தது.இதனை அடுத்து நிலாவெளி பொலிஸார் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் பிரச்சனைகள் உருவாக்கப்படலாம் என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் தமிழ் மக்கள் முன்னணி கட்சியின் இளைஞர் அணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணபிள்ளை ஸ்ரீ பிரசாத் திருகோணமலை தமிழர் பேரவையின் தலைவர் ஆர்.ஜெரோம், மற்றும் ரமேஷ் நிக்கலஸ் எட்டு பேருக்கு இத்தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்