கொழும்பில் பிரதான வீதிகளில் முறிந்து விழும் ஆபத்தில் உள்ள மரங்கள்! அச்சத்தில் பயணிக்கும் மக்கள்
கடந்த வாரத்தில் கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 59 மரங்கள் வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஆணையாளரின் கூற்றுப்படி, விஹார மஹா தேவி பூங்காவில் 19 மரங்கள் சரிந்து விழுந்தன, பெரும்பாலான சம்பவங்கள் பிரதான வீதிகளில் நிகழ்ந்தன.
“பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன் கொழும்பு மாநகர சபை, தற்போது விழுந்த மரங்களை அகற்றி வருகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பல மரங்கள் ஆரம்பத்தில் ஆபத்தில் இருக்கவில்லை ஆனால் பலத்த காற்றுக்கு விழுந்துள்ளதாக ஜெயவர்தன கூறியுள்ளார்.
மேலும், 50 முதல் 150 வயது வரையிலான 200 மரங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஜெயவர்தன சுட்டிக்காட்டினார்.
(Visited 14 times, 1 visits today)