பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம் – நபர் ஒருவர் உயிரிழப்பு!
தெல்தோட்டை – கண்டி வீதியில் ஹல்வத்த பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.





