இலங்கை : மட்டக்களப்பிற்கும் – கொழும்பிற்கும் இடையிலான ரயில் சேவைகள் இரத்து!

மட்டக்களப்புக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் இயங்கும் அனைத்து ரயில் பயணங்களும் இன்று (17.10) ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்புக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் தினசரி 6 ரயில் பயணங்கள் இயக்கப்படுகின்றன.
கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற புகையிரதம் காட்டு யானைகள் மீது மோதியதில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தின் காரணமாக இந்த பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னேரிய மற்றும் ஹிகுராக்கொட புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், புகையிரதத்தின் நான்கு எரிபொருள் தாங்கிகள் மோதி, அவற்றில் இரண்டு கவிழ்ந்துள்ளன.
(Visited 27 times, 1 visits today)