கம்ப்ரியாவில் (Cumbria) தடம் புரண்ட ரயில் – சேவைகள் தாமதமடையலாம்!
வடமேற்கு இங்கிலாந்தில் அமைந்துள்ளது கம்ப்ரியாவில் (Cumbria) இன்று ரயில் தடம் புரண்டதை தொடர்ந்து ரயிலில் இருந்த 130 பயணிகள் அருகில் இருந்த விடுதி ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கிளாஸ்கோ சென்ட்ரலில் (Glasgow Central) இருந்து லண்டன் யூஸ்டனுக்கு (London Euston) பயணித்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன் பெட்டி தடம் புரண்டதாக பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த ரயில் பாதையில் சேவைகள் தாமதமடையலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 6 visits today)





