இந்தோனேஷியாவில் தண்டவாளத்தில் சிக்கிய டிரக் மீது ரயில் மோதி பாரிய விபத்து!
இந்தோனேஷியாவில் டிரக் வண்டி மீது ரயில் மோதி விபத்துக்கிள்ளானது.
சுதபயா மற்றும் ஜகார்த்தா இடையை மத்திய ஜாவாவின் தலைநகரான செமராங் நகரில் நேற்று கிராசிங்கை கடக்க முயன்ற ட்ரக் ஒன்று தண்டவாளத்தில் சிக்கியது.
வெகுநேரம் போராடியும் அதனை எடுக்க முடியாதநிலையில் அந்த வழியாக வந்த பயணிகள் ரயில் டிரக் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் டிரக் அருகில் இருந்த எஃகு பாலத்திற்குள் தள்ளப்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் ரயிலில் இருந்து தப்பிப்பதற்காக ஆற்றில் குதித்த ஒருவர் மட்டுமே காயமடைந்ததாக தகவல்க்கள் வெளியாகி உள்ளன.
(Visited 27 times, 1 visits today)





